Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருசமா மக்கள் மகிழ்ச்சி…! அதிமுக ஆட்சி சூப்பர்…. எடப்பாடி கலக்கிட்டாரு…!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, கேரளாவில் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து எதிர்த்து போட்டியிடுகின்றார்.  வேறு வேறு வார்த்தையில் பேசுகிறார்கள். மேற்கு வங்கத்தில்  காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள். கொள்கை மாறி ஒரு மாநிலத்தில் கூட்டணி வைக்கிறீர்கள். இன்னொரு மாநிலத்தில் எதிர்த்து போட்டி போடுகிறீர்கள்.  கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் ரொம்ப சந்தோசமாக இருக்கிறார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எந்த குறையும் வைக்கவில்லை. எதிர்க்கட்சியில் இந்த குறை இருக்கிறது, அந்த குறை இருக்கிறது என்று சொல்வது பொய்யான விஷயம். நான் வாழும் பகுதியிலும் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். திடீரென்று தண்ணீர் வராது,  கிளினிக்  இருக்காது,  ரோடு பிரச்சனை இருக்கும், அந்த சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கிறது. கல்வி மூலமாக என்ன பண்ண முடியுமோ  அதை எல்லாமே செய்து கொடுப்பேன்.

ஆயிரம் விளக்கு திமுகவின் கோட்டையாக இருந்திருந்தால், முக ஸ்டாலின் கொளத்தூர் போயிருக்க மாட்டார். மக்கள் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டாக ரொம்ப சந்தோசமாக இருக்கிறார்கள். கொரோனா பிரச்சனையிலும் தமிழகத்தை போல வேறு எந்த மாநிலமும் இந்தியாவில் கொரோனா பிரச்சனையை தீர்த்தது கிடையாது என தெரிவித்தார்.

Categories

Tech |