Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருடம் அதிமுக அமைச்சர்…! அதிருப்தியில் மக்கள்… வாணியம்பாடி தொகுதி ஒரு பார்வை …!!

சிறுபான்மையினர் பெரும்பாலும்  வசிக்கக்கூடிய, தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடமான புல்லூர் பகுதியையும்,  காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் தன்னகத்தே கொண்ட பல கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய தொல்பொருட்கள் நிறைந்த தோல் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கக் கூடியது வாணியம்பாடி. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம், ஆலங்காயம் இரண்டு  பேரூராட்சிகள் உள்ளன. 45 ஊராட்சிகள் இருக்கின்றன.

கடந்த தேர்தல்களை பார்க்கும் பொழுது இஸ்லாமிய அமைப்புகளுடன் கூட்டணி வைத்து பெரும்பாலான கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு தேர்தலை பொருத்த வரையில் அதிமுக சார்பில் நின்ற நிலோபர் கஃபில் தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கின்றார். இவர் தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்று கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சர் பதவியில் உள்ளார்.

வாணியம்பாடி தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,43,058. இந்த தொகுதியின் முதன்மை தொழிலாக தோல் தொழிற்சாலை, விவசாயம் மற்றும் நெல் கரும்பு ,பருத்தி சாகுபடி இருக்கின்றன.  வாணியம்பாடியில் 130க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
ஆண்டிற்கு சுமார் 1200 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது. விவசாயத்தைப் பொறுத்தவரையில் நெல்,கரும்பு மற்றும் பருத்தி சாகுபடி செய்கின்றனர்.

இஸ்லாமியர்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு அமைச்சர் நிலோபர் கஃபில் நன்றி! - Ayithaezhuthu

நிலுவையில் உள்ள வாக்குறுதிகள்:

நியூ டவுன் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

அரசு கலைக்கல்லூரி நிறுவப்படும்.

அரசு தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும்.

வலையாம்பட்டு ரயில்வே மேம்பால கட்டுமான பணி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி தொகுதியில் பத்திற்கும் மேற்பட்ட அரசு நடுநிலைபள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் தும்பேரி ஊராட்சி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைபள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

வாணியம்பாடி பெருமாள் பேட்டையில் அரசு ஐ.டி.ஐ  கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு தொழிலாளர் மண்டல அலுவலகம் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறுபான்மையர் பெரும்பாலாக வசிக்கக்கூடிய தொகுதி சிறந்த நீர் மேலாண்மை காண விருது வாங்கிய மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த வாணியம்பாடி தொகுதி தண்ணீரை சேமித்து வைக்க ஒரு தடுப்பணை கூட கட்டப்படவில்லை.
பெரும்பாலான கட்சிகள் மீது இங்கு வசிக்கும் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

Categories

Tech |