உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரசாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர், கோவில்பட்டியை பொருத்தவரை செய்தி துறையின் அமைச்சராக இருக்கின்றார். இவர் கடந்த பத்து வருடமாக கோவில்பட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஆனால் நான் கேட்கிற கேள்வி… கோவில்பட்டியில் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு கொண்டிருக்கிறாரா?
பத்து வருஷமாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராகவும் இருக்கிறார், ஏதாவது கோவில்பட்டியில் இருக்கின்ற பிரச்சினைக்கு முழுமையாக…. நிரந்தரமாக…. தீர்வு கண்டுள்ளாரா ? இதுதான் இன்று இருக்கிற லட்சணம். கோவில்பட்டி நகர மக்களின் இரண்டாவது பைப்லைன் திட்டம். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அப்படியே கிடப்பில் போட்டு வச்சுருக்காங்க. மந்தமா இந்த பணி நடந்து கொண்டிருக்கிறது.
60 சதவீதமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இரண்டாவது கட்ட பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜு இரண்டாவது பைப் லைன் திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருக்கிறார். ஆனால் இன்றுவரை பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காத நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறது. கோவில்பட்டி சட்டமன்றத்திற்குதொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். இதுவரை கூட்டு குடிநீர் திட்டம் வரவில்லை.
இதுபோல கோவில்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் அமைத்து தரப்படும் என உறுதிமொழி கொடுத்தார். இதுவரை அந்த சாலைகளும் முழுமை அடையவில்லை. தேர்தல் வருவதை ஒட்டி தற்போதுதான் சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி கொண்டிருக்கிறார்.
கோவில்பட்டியில் உள்ள இழவரசனை என்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்க பாதையும் தரமற்ற வகையில் அமைக்கப்பட்டதால், அந்த சுரங்கப் பாதையில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்று என்னிடம் சொல்லியுள்ளார்கள். இதுபோல சுரங்கப்பாதை அருகே ஒரு சர்விஸ் ரோடு அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகிறார்கள்.
ஆனால் இதுவரை அமைச்சர் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அவசர மருத்து சேவைக்கு கூட செல்ல முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இப்படிப்பட்ட நிலைமையில் தான் இந்த தொகுதி இருந்து கொண்டிருக்கிறது என முக.ஸ்டாலின் பட்டியலிட்டு பேசினார்.