திமுக எம்பி கனிமொழி, 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாததால் மக்களை சந்தித்து குறைகளை கேட்டுவருகிறோம் என்று கூறியுள்ளார்.
திமுக எம்பி கனிமொழி தேர்தல் நெருங்குவதை ஒட்டி கடந்த இரண்டு நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் ‘என்ற தலைப்பில் பரப்புரை ஆற்றி வருகிறார். இது குறித்து பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழி, அவிநாசி மற்றும் பல்லடம் சட்ட பேரவை தொகுதிகளில் செய்தியாளர்களை சந்தித்து பெண்களுக்கு நியாயவிலை கடைகளில் தரமில்லாத மோசமான பொருள்கள் வழங்குவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
நியாயவிலை கடைகள் சரியான முறையில் செயல்படுவதில்லை என்றும் கூறியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஏன் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கேட்டுள்ளார் .தாங்கள் 10 வருடமாக ஆட்சியில் இல்லாததால் எல்லாரையும் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார் .