Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

10 அடி ஆழ தொட்டியில் மயங்கி விழுந்த தொழிலாளி… பெரும் பரபரப்பு…!!!!!!

நாகர்கோவில் செட்டிகுளத்தில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 10 அடி ஆழமுடைய தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த தொழிலாளி செல்வம் என்பவர் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது பெயிண்ட் வாசம் தாங்க முடியாமல் செல்வம் திடீரென மயங்கி தொட்டியில் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின் மாவட்ட தீயணைப்பு அதிகாரி தென்னரசு உத்தரவின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் தொட்டியில் விழுந்த செல்வத்தை பாதுகாப்பாக அழைத்து வெளியே கொண்டு வந்துள்ளனர். மேலும் அந்த தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார். அதன் பின் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |