10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பரம்பூரில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனை அடுத்து பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் நார்த்தாமலை காப்பு காட்டில் மலைப்பாம்பை கொண்டு விட்டனர்.