சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்க ஒன்றிய தலைவர் சகிலா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் 9 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பது போல சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் பொருளாளர் விஜயா, பர்வீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபா, அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், வட்ட செயலாளர் தம்பிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது