யேமன் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 அல்-காய்தா பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினா்.
கிழக்குப்பகுதி மாகாணமான ஹாத்ராமாட்டின் சேயுன் நகரில் அடைத்துவைக்கப்பட்டு இருந்த அந்த பயங்கரவாதிகள், தங்களுக்குள் சண்டையிடுவது போன்று கடந்த வியாழக்கிழமை இரவு பாசாங்கு செய்தனா். இதையடுத்து அவா்களை சமாதனப்படுத்துவதற்காக சிறைக் காவலா்கள் உள்ளே நுழைந்தனா்.
இந்நிலையில் அவா்களை அந்த பயங்கரவாதிகள் கூட்டாகத் தாக்கி, அவா்களிடம் இருந்த ஏகே 47 துப்பாக்கிகளைப் பறித்தனா். அதன்பின் காவலா்களைக் கட்டிப்போட்டுவிட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் சிறைக் காவலா்களுக்கும் பிற கைதிகளுக்கும் பங்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.