ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.டி.ஓ. முருகேசன், உதவி வன பாதுகாவலர் சக்திவேல், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பரதன், வனசரவர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் விவசாயிகள் கூறியதாவது. நமது கொடைக்கானல் தாலுகாவில் உள்ள சாலை ஓரங்களில் மிகவும் ஆபத்தான மரங்கள் அதிக அளவில் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் மரங்கள் சாலையில் சாய்ந்து விழுகிறது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே சாலை ஓரங்களில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வடகவுஞ்சி பகுதியில் கடந்த 1978-ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அந்த நிலத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே விவசாய நிலத்திற்கு பட்டா வழங்கி விவசாயிகள் விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.