ஜெர்மனியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள நாடுகளிலிருந்து ஜெர்மனிக்கு குடிபுகுவோரின் எண்ணிக்கை 2020ல் பாதியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஐ கணக்கிடும் போது மொத்தமாக ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 31 % குறைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஜெர்மனிக்கு இந்தியர்கள் வருவது மிகவும் குறைந்து விட்டதாகவும், சீனா மற்றும் அமெரிக்கர்களை பொருத்தவரை ஜெர்மனிக்கு வருபவர்களை விட ஜெர்மனியை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளி விவரம் கூறுகிறது.