Categories
மாநில செய்திகள்

10 ஆண்டுகளில் குடிசையில்லா தமிழகம்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!!

சென்னையில் கிரடாய் அமைப்பின் மாநில மாநாட்டில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது கட்டுமானத்துறை என்பது எப்போதும் வளரும் தொழிலாக உள்ளது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக கட்டுமானத்துறை உள்ளது. கட்டுமானத் துறையில் பல புதிய முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. மனைப்பிரிவு மனைகளுக்கு 60 நாளில் அனுமதி அளிப்பதற்கான ஒற்றைச்சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை 12 மண்டலங்களாக அறிவித்து திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளன.

2031-க்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31,000 கோடியில் 9.53 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும். தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |