Categories
மாநில செய்திகள்

10 ஆண்டுகளுக்கு பிறகு…. பொங்கலுக்கு புது டிசைனில்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு வேஷ்டி, சேலைகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இலவச வேஸ்டி, சேலைகள் உற்பத்திக்கு முதல் தவணையாக 243.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிக்கப்பட்டு வரும் அனைத்து வேஷ்டி சேலைகளின் தரம் பார்த்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு புதிய டிசைனில் தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது. 2023 ஜனவரி 10ம் தேதிக்குள் வேட்டி, சேலைகளை மக்களுக்கு வழங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |