தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் எடுத்துவரும் அதிரடி முடிவுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நீண்டகாலமாக 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுதும் வசதியை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. அது குறித்த அறிவிப்பை தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெளியிட்டுள்ளார். அதன்படி 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் அரியர் தேர்வு நடத்தப்படும் என்றும், ஜூன் 21ஆம் தேதி முதல் நடைபெறும் தேர்வுக்கு இன்று முதல் ஜூன் 3 ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.