குத்தகை செலுத்தாத விவசாய நிலம் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் பகுதியில் தேசிய விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் மணவாளக்குறிச்சியில் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 59 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர் 10 ஆண்டுகளாக குத்தகைப் பணத்தை செலுத்தாமல் இருக்கிறார். இந்த நிலத்தை மீட்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவின்படி முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் செயல் அலுவலர் பொன்னி தலைமையிலான குழு நிலத்தை மீட்டனர். அந்த நிலத்தில் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான நிலம் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட நிலம் விரைவில் குத்தகைக்கு விடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.