அமெரிக்காவை சேர்ந்த சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிடி லைஃப் இன்டேக் அமைப்பு காற்று மாசுபாடு ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது .அந்த ஆராய்ச்சியில் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 10 வருடங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் கங்கை சமவெளி பகுதி தான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது.
அதாவது, பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த காற்று மாசுபாடு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. முடிந்தவரையில் காற்றை மாசுபடுத்தாமல் இருப்பது, நமக்கும், நமக்கு பின் வரும் சந்ததிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.