கெயில் எரி காற்று குழாய் பதிப்பு குறித்து 10 ஆண்டு கால போராட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். கெயில் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்றுவதற்கு ஆவண செய்ய வேண்டும். மேலும் திமுக மாபெரும் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்று விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை, எட்டு வழிச் சாலை திட்டம் ரத்து, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி ரத்து என விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
Categories