பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தேர்வுத் துறை மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர மார்ச் 9ஆம் தேதி முதல் 15ம் தேதிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பயிற்சி வகுப்பு நடக்கும் நாள், மையம் போன்ற விவரங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களை அணுக வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வு சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories