உடுமலை பகுதி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு 46 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. அதற்காக சீனிவாசா பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது.
அதனைப் போலவே வருகின்ற 29,30 ஆகிய தேதிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.