Categories
மாநில செய்திகள்

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களே…. இன்று மதியம் 2 மணிக்கு…. முக்கிய அறிவிப்பு…!!!!

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு தேர்வுத்துறை சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு  நடத்தப்பட்டு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

இதில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் உள்ள தேர்வர்கள் பட்டியல் என்ற www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் இடம் பெற மாணவர்கள் தங்களுடைய தேர்வு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தங்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் பெற்றதற்கான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |