10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பள்ளி படிக்கும் மாணவர்கள் படிப்பதற்கு நேரம் செலவிடுவதை விட செல்போன்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் ஏராளமான மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் யுவஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யுவஸ்ரீ டியூஷன் மூலம் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுவதற்கு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வும் நடைபெற்றது.
ஆனால் அதில் யுவஸ்ரீ ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த யுவஸ்ரீ நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.