Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. நாளை(அக்….14) முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |