தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பா செய்யப்பட்டனர்.
ஆனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிடப்படாது என்ற செய்தி உண்மையாக இருந்தால் அது தவறு என்று அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பத்தாம் வகுப்பில் கல்வியை நிறுத்தி கொள்பவர்களுக்கு அரசு பணி சேர்வதிலும், மேல்நிலைப்பள்ளி வகுப்பில் சேர்வதிலும் பெரும் சிரமம் ஏற்படும் என்று கூறியுள்ளார். மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.