Categories
தேசிய செய்திகள்

“10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு”…. கர்நாடக மாநில கல்வித்துறை அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மார்ச் 28-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி கன்னடம், தமிழ் உள்ளிட்ட முதல் மொழி தேர்வு மார்ச் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் 30-ல் இரண்டாவது மொழியான ஆங்கிலம், ஏப்ரல் 4-ல் கணிதம், ஏப்ரல் 6-ல் சமூக அறிவியல், ஏப்ரல் 8-ல் இந்தி உட்பட மூன்றாவது மொழி, ஏப்ரல் 11-இல் அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளது.

Categories

Tech |