தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஆண்டுக்கு ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது . அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன . அதில் முதல் கட்டமாக 9 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 50% மாணவர்கள் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது .
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட அச்சத்தை சரி செய்யும் வகையில் 45 நாட்களுக்கு புத்துணர்வு வகுப்புகள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திலன் மூலமாக ஒரு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . அதில் அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின் படிப்பை மேம்படுத்தவும் மற்றும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கவும் வகையிலும் சிறப்பு வினாடி வினா போட்டி நடத்த திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஓவ்வொரு சனிக்கிழமை தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் இந்த வினாடி வினா இணைய வழியில் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் செய்ய வேண்டும்.பள்ளிகளில் உள்ள கணினி எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு தமிழ்,ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றிலிருந்து தலா 10 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்காக 1.30 மணி நேரம் ஒதுக்க வேண்டும்.அதன்பிறகு மாணவர்களிடம் விடைகள் குறித்து பாட ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும். இந்தப் பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.