தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேதி மற்றும் பாடவாரியான தேர்வு அட்டவணையானது கடந்த நவம்பர் மாதம் ஏழாம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துற வெளியிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருவதையடுத்து பத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட் வெளியான பிறகு மாணவர்கள் அரசு தேர்வு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in/ என்பதில் சென்று தங்களுடைய பள்ளியின் பெயர்,மாவட்டத்தை தேர்வு செய்து அதில் மாணவரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை கொடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.