Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு…. இது கட்டாயம் வழங்க…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பா செய்யப்பட்டனர்.

ஆனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் +1 மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதே பள்ளியில்
+1 படிப்பதாக இருந்தாலும் மாற்று சான்றிதழ் வழங்குவது அவசியம். எந்த காரணத்திற்காகவும் மாற்றுச் சான்றிதழ் தராமல் மாணவர்கள் +1-இல் சேர்க்க வேண்டாம். அதே பள்ளியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் புதிய மாணவர்களாக கணக்கிடப்பட்டு சேர்க்கை எண் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |