Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

10 ஆயிரத்து 18 கிலோ பச்சை மிளகாய் கொண்டு நடைபெற்ற சிறப்பு யாகம்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

பிரசித்தி பெற்ற கால பைரவர் கோவிலில் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா பிரசித்திங்கரா தேவி -மகா காலபைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அமாவாசையை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஆடி  அமாவாசையை முன்னிட்டு  கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பிரத்தியங்கிரா ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்றது.

இதனையடுத்து மணக்குறைகள் நீங்களும், கடன் தொல்லைகள், எதிரி தொல்லைகள்  போன்ற  அனைத்து பிரச்சினைகளும் நீங்கி நல்வாழ்வு பெறுவதற்காக 10 ஆயிரத்து  18 கிலோ பச்சை மிளகாய் மகாயாகம் நடைபெற்றது. அதன்பின்னர் பிரத்தியங்கிரா தேவிக்கும், கால பைரவருக்கும் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரணை நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்

Categories

Tech |