Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

10 ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடி பணிகள் தீவிரம்…!!!

நாகை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இளக்கை தாண்டி முழுமையாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

8 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் மேட்டூர் அணை பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு, அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில தினங்களாக நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாலும் சரியான நேரம் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர், போதுமான அளவில் கிடைப்பதாலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாண் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதுலங்கண், செந்தியான் மகாதேவி, குறிச்சி, வடுகசேரி, வடுக ஊர் கிராமத்து மேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாய்கள் தற்போது நாற்று பறித்தல், நடவு பணி, களை எடுத்தல், நாற்றுகளைப் பறித்து வயலில் டிராக்டர் மூலம் எடுத்துச் செல்லுதல், போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். ஜூலை மாதத்துடன் குறுவை நடவு பணிகள் நிறைவடையும் என தெரிவித்து விவசாயிகள். சரியான நேரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் வரத்து, போதுமான அளவு மழை போன்ற காரணங்களால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி நிறைவாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |