10% இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் திமுக தரப்பில் ஆணித்தரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்புகளுக்கு எல்லாம் முரணாக தற்போதைய தீர்ப்பு வெளிவந்துள்ளது.
உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என தலைமை நீதிபதி லலித், நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பளித்துள்ளனர். அரசியல் சட்டம் வகுத்துள்ள சமத்துவத்துக்கு எதிராக எந்த சட்ட திருத்தமும் இருக்கக் கூடாது என்பதே இதுவரையிலான தீர்ப்புகள் நிலைநாட்டி உள்ளன. 10% இட ஒதுக்கீடு செல்லும் என வந்துள்ள தீர்ப்பு சமத்துவ கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் உள்ளது. 82 சதவீத பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களின் சமூக நீதி காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.