பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி போராட்டத்தில் பின்னடைவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட ஒருமித்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் 10% ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு ஒரு பின்னடைவு. முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.