Categories
இந்திய சினிமா சினிமா

10 கோடி இல்ல….. எத்தன கோடி கொடுத்தாலும் இதுல நடிக்க மாட்டேன்….. மறுத்த அல்லு அர்ஜுன்..!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் குட்கா, மதுவகை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் நடிகர் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரமாக மாறி அவருடைய மார்க்கெட் ஏகிறியது. இது போன்ற சமயங்களில் பிரபல திரைப்பட நட்சத்திரங்களை விளம்பரத்தில் நடிக்க வைக்க பெரு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்வது வழக்கம்.. அந்த வகையில் குட்கா நிறுவனம் ஒன்று தங்களது விளம்பரங்களில் 10 கோடி ரூபாய் சம்பளத்தில் நடிக்க நடிகர் அல்லு அர்ஜுனிடம் கேட்டபோது, எத்தனை கோடிகள் கொடுத்தாலும் குட்கா, பான் மசாலா போன்ற மதுவகை விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் தற்போது ஒரு விளம்பரத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் 7.5 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில், 10 கோடி ரூபாய்க்கு வந்த குட்கா விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன், ஷாருக்கான், அக்ஷய் குமார் போன்ற நடிகர்கள் குட்கா, பான் மசாலா போன்ற விளம்பரங்களில் நடித்தது பெரும் எதிர்ப்புகளையும், சர்ச்சைகளையும் கிளப்பியது. இதற்காக அமிதாப்பச்சன், அக்ஷய் குமார் ஆகியோர் இனிமேல் குட்கா, பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |