10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெருப்பெரிச்சல் கிராமத்தில் செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக புன்செய் நிலம் 8 ஏக்கர் 45 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலம் மீட்க்கப்பட்டது.
நேற்று முன்தினம் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நிலம் இந்து அறநிலையத்துறையின் கீழ் சுவாதீனம் பெறப்பட்டது. பத்து கோடி மதிப்பில் மீட்கப்பட்ட நிலத்தில் அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்தார்கள்.