10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 27 சென்ட் நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி, கோவில் செயல் அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். மேலும் அந்த இடத்தில் பெயர் பலகை வைத்து, கம்பி வேலி அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.