Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

10 கோடி ரூபாய் மதிப்பு…. கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் சுவாமி வகையறா கோவிலுக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோமதி ஆகியோர் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை மீட்டு அங்கு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

Categories

Tech |