கோவிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே புன்னைநகர் பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான 63 சென்ட் நிலம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அறநிலை துறை வட்டாட்சியர் சஜித், முப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் நில அளவையர்கள் ராகேஷ், அஜித் ஆகியோர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு அதில் அறிவிப்பு பலகை வைத்தனர். மேலும் அந்த நிலத்தை பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.