Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

10-க்கும் மேற்பட்ட ஏரிகள்…. 1,000 பனை விதைகள்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி….!!

ஏரிக்கரைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கனந்தல் பேரூராட்சியில் 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பகுதிகளில் 1,000 பனை விதைகளும் விதைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சியின் முதல் நிலை அலுவலர் வைத்தியநாதன், பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் தண்டபாணி, குடிநீர் திட்ட அலுவலர்கள் ராமச்சந்திரன், லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள்  மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |