Categories
மாநில செய்திகள்

10 சதவீத இட ஒதுக்கீடு… காங்கிரசை தொடர்ந்து தி.மு.க… உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்…!!!!!!

கடந்த 2019-ஆம்  வருடம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தவிர பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு முற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 7-ஆம் தேதி இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என அப்போதைய  அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா எம் திரிவேதி, ஜெ.பி பர்தி வாலா போன்ற மூன்று பேரும் தீர்ப்பளித்துள்ளனர்.

அதே சமயம் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது என அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான யுயு லலித், நீதிபதி எஸ் ரவீந்திர பட் ஆகிய இருவரும் தீர்ப்பளித்துள்ளனர். மேலும் பெரும்பாலான நீதிபதிகள் மேற்கொண்ட முடிவின்படி 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கட்சிகள் கூறி வந்த நிலையில் தற்போது காங்கிரசை  தொடர்ந்து தி.மு.க சார்பில் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுக்கள் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |