பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மேல்முறையீடு செய்யப்படும் என அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103 வது திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். மேலும் இது பற்றி திருமாவளவன் பேசும்போது முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சமூக நீதிக்கு அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கூற்றுகளுக்கு எதிரானது என கூறியுள்ளார்.