சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு சுங்க வரியில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசி விலை,உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசி விலைக்கு இணையாக இருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. தற்போது இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளுக்கு 10% சுங்கவரி, 16.5% சரக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது.