மாணவி சத்யாவை கொலை செய்த வாலிபர் அதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார்.
கடந்த 13-ஆம் தேதி கல்லூரி மாணவி சத்யாவை சதீஷ் என்ற இளைஞர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலின் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்நிலையில் சதீஷை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் சதீஷ் கூறியதாவது. சத்யாவை நான் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். ஆனால் அவரது பெற்றோர் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயற்சி செய்தனர்.
இதனால் சத்யா என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். மேலும் நாள்தோறும் சத்யாவை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவரை பின்தொடர்ந்து சென்றேன். ஆனால் எனக்கு அவரை கொலை செய்ய மனமில்லை. இந்நிலையில் 10 நாட்களாக சத்யாவை பின் தொடர்ந்து சென்று திரும்பி வந்து விட்டேன். இறுதியாக சத்யாவை ரயில் முன்பு தள்ளி கொலை செய்து விட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்