உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அளவு கடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழ வகைகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.
அதன்படி அன்னாசி பழத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது புரதத்தை செரிக்கக்கூடிய ப்ரோமெலைன் என்ற என்சைம் நிறைந்துள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. உப்பு சிறுநீரகங்கள் சிறப்பாக இயங்க தூண்டிக்கொண்டே இருக்கும். அதனால் உடலில் உள்ள விஷப் பொருட்கள், கழிவு பொருட்கள் உடனுக்குடன் சிறுநீர் மூலம் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும். அன்னாசி பழத்தை அளவாக சாப்பிட்டால் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
இது புண்கள் மற்றும் வீக்கத்தை சரிசெய்யக்கூடிய தன்மை கொண்டது. செரிமானத்தை சீர் செய்யும். ஒரு அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இதை முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும். மேலும் அன்னாசி பழம் சாப்பிடுவதால் சில பெண்கள் ஆண்களுக்கு லேசான அலர்ஜிகள் ஏற்படலாம்.
இதனைப் போக்க அன்னாசி பழ துண்டுகளை சுத்தமான உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும். சொறியை ஏற்படுத்தும் பழ என்சைம்களை இது நீக்கிவிடும். முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிடக்கூடாது. அன்னாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். உடலில் உள்ள காயங்களை விரைவில் ஆற்ற அன்னாசிபழம் பயன்படுகிறது. இதில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதனால் கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். எனவே அன்னாசி பழத்தை தினமும் அளவோடு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.