Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

10 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை…. தாய்க்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குழந்தை பிறந்த 10 நாளில் தாய் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தொண்டமாந்துறை பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் கௌசல்யாவுக்கு வெங்கடேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கௌசல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென கௌசல்யாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் உறவினர்கள் கௌசல்யாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |