நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்,இதனைக் கட்டுப்படுத்தும் முனைப்பில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ பரிசோதனை எடுப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கும் மட்டுமே வெளியே வர அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.