Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“10 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கும் நல்ல பாம்பு”…. வழிபாடு செய்யும் கிராம மக்கள்…. பரபரப்பு..‌!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரண்மல்லூர் ஒன்றியம் வல்லம் கிராமத்தில் ஏரிக்கரை ஓரத்தில் சில தொழிலாளர்கள் மரம் வெட்ட சென்ற போது அங்கு வேப்பமரத்துக்கடியில் ஆறடி நீளம் இருக்கும் நல்ல பாம்பை பார்த்துள்ளார்கள். இதனால் விரைந்து வந்து கிராம மக்களிடம் கூறியுள்ளார்கள். இதன்பின் அனைவரும் நல்ல பாம்பு இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தார்கள்.

அந்த நல்ல பாம்பு தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக அங்கேயே இருக்கின்றது. இதனால் வல்லம் கிராமத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் பாம்புக்கு பால் கொண்டு வந்து வழிபாடு செய்கின்றார்கள். இதனிடையே சில பெண்களுக்கு சாமி வந்து கோவில் கட்ட வேண்டும் என அருள் வாக்கு கூறினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Categories

Tech |