கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில்கள் அமைத்து விற்பனை செய்யும் பணியானது மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் நகரில் ஆந்திராவை சேர்ந்த ராஜி என்றவர் வசித்து வருகிறார். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவாலயங்கள் மற்றும் வீடுகளின் வாசலில் போடப்படும் கிறிஸ்துமஸ் குடில் தயாரித்து விற்பனை செய்து தொழில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சிறுசிறு மனிதர்கள், ஆடுகள், ஒட்டகம், புல் போன்றவற்றை வைத்து பெத்தலகேமில் இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தை போன்று ராஜி நான்கு வடிவங்களில் குடில்களை அமைத்துள்ளார். இதனையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் குடில்களை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருக்கின்றனர். இதில் சிறிய வகை குடில்கள் 750 ரூபாய்க்கும், பெரிய வகை குடில்கள் 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.