Categories
தேசிய செய்திகள்

10 நாட்கள் தீபாவளி விடுமுறை…. ஆன்லைன் வகுப்புகளும் கிடையாது…. மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்….!!

மகாராஷ்டிராவில் வரும் பத்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவின் கோர தாண்டவத்தால் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் மாணவர்களின் கல்வியில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வரும் பட்சத்தில் மகாராஷ்டிராவில் இம்மாதம் முதல் நகர்ப்புறங்களில் எட்டாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது நவம்பர் 10ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ள மகாராஷ்டிர மாநில பள்ளி கல்வித்துறை வருகிற நவம்பர் 10-ஆம் தேதி வரை மாணவர்களுக்கு தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நாட்களில் நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெறாது எனவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |