தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்றும், கரும்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆட்சியில் இருப்பதற்காக மதங்களுக்கு இடையே வெறுப்பை பாஜக விதைப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். கரும்பை பொங்கல் பண்டிகை அன்று வழங்கினால் தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். 10 நாட்களுக்கு முன்பே வழங்கினால் நன்றாக இருக்குமா? என கேள்வி எழுப்பினார்.