தேங்காய் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
நற்பதமான துருவிய தேங்காய் – 1 கப்
கொதிக்க வைத்து குளிர வைத்த பால் – 1 1/4 கப்
சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கியப்பின், கொதிக்க வைத்து குளிர வைத்த பாலை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.
அதனை அடுத்து பாலானது சுண்டியப்பின், சர்க்கரையை சேர்த்து கிளறி விடவும். பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் கிளறும் போது, அல்வா போன்று எதிலும் ஒட்டாமல் வரும். அப்போது முந்திரி மற்றும் எஞ்சிய நெய்யை சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் அல்வா தயார்.