பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.
பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் i4 எலக்ட்ரிக் செடான் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த கார் மே 26-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் 2-வது எலக்ட்ரிக் கார் ஆகும். இந்த i4 எலக்ட்ரிக் செடான் கார் ஏரோ அப்டிமைஸ் செய்யப்பட்ட சக்கரங்கள், ஃபிளஸ் செய்யப்பட்ட கைப்பிடிகள், இரட்டை திரை அமைப்பு, 14.6 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் digital instrument gluster போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
இந்த கார் edrive40 மற்றும் M50 Xdrive என்ற 2 மாடல்களில் அறிமுகமாகிறது. இதில் edrive40 83.9KWh பேட்டரி பேக் மற்றும் M50 Xdrive 80.7KaWh பேட்டரி பேக் உடன் வருகிறது. இதனையடுத்து edrive40 காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 590Km தூரம் வரையும், M40 Xdrive காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 510Km தூரம் வரையும் செல்லும். மேலும் இந்த 2 மாடல் கார்களையும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் edrive40 கார் 164கி.மீ வரையும், M50 Xdrive கார் 100 கிலோ மீட்டர் வரையும் ஓடும்.