Categories
உலக செய்திகள்

10 பேரை கொன்றது …. ஆட்டிசம் பாதிப்பு காரணம் ? …. குழம்பிய நீதிமன்றம் ..!!

நபர் ஒருவர் கொலை செய்த குற்றத்திற்கு என்ன காரணமென்று தெரியாமல் நீதிமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  

கனடாவைச் சேர்ந்த Minnasian என்ற நபர் கடந்த 2018 ஆம் வருடம் பாதசாரிகள் கூட்டத்தில்  வேனை செலுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் 16 பேர் படுகாயமடைந்ததுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கின் குற்றவாளியான Minnasian ஆட்டிசம் நோய் பாதிப்பு உடையவர் என்ற ஒரு விவாதம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதனால் அவர் குற்றச்செயல்களுக்கு அவர் பொறுப்பாக மாட்டார் என்ற விவாதமும் நீதிமன்றத்தில் நீண்டு கொண்டே சென்றது. இந்நிலையில் அரசு சார்பில் பேசிய வக்கீல்கள் குற்றவாளி தான் ஆட்டிசம் நோய் ஏற்பட்டுள்ளது ஆனால் அவர் செய்த குற்றத்திற்கு ஆட்டிசம் காரணமல்ல என்று கூறியுள்ளார்கள்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி கூறியதாவது, “நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்Minnasian என்ற நபர்தான் குற்றம் செய்துள்ளாரே தவிர ஆட்டிசம் என்ற பிரச்சனை குற்றவாளிக்கூண்டில் நிற்கவில்லை என்றார். மேலும்  அவர் செய்த குற்றத்திற்கு அவர் காரணமா இல்லையா ?என்பதே பிரச்சனை என்றார். எனவே இந்த விசாரணையை முடித்த நீதிபதி வழக்கின் தீர்ப்பை மார்ச் 3ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார்.

Categories

Tech |